tamilnadu

img

உ.பி. பாஜக அரசின் அடுத்த அடாவடி மீரட் மாவட்டத்திற்கு கோட்சேவின் பெயர்?

லக்னோ:
மீரட் மாவட்டத்திற்கு, மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த ‘நாதுராம்கோட்சே’வின் பெயரைச்சூட்டுவதற்கு, உத்தரப்பிரதேச மாநில பாஜக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.உத்தரப்பிரதேசத்தில், இஸ்லாமிய அடையாளத்திலுள்ள நகரங்களின் பெயர் களை, ஆதித்யநாத் தலைமையிலான மாநில பாஜக அரசுஒவ்வொன்றாக மாற்றி வருகிறது. அலகாபாத்தை ‘பிரயாக் ராஜ்’ என்றும், பைசாபாத்தை அயோத்தியா என்றும், ரயில் நிலையத்திற்கு இருந்த முகல்சராய் என்ற பெயரை, ‘தீனதயாள் உபாத்தியாயா’ என்றும் ஏற்கெனவேமாற்றியுள்ளது.இதன் அடுத்தகட்டமாகவே, மீரட் மாவட்டத்தின் பெயரை, பண்டிட் நாதுராம் கோட்சே என்றும், ஹபூர் மாவட்டத்தின் பெயரை மகந்த் அவைத்யநாத் நகர், காஸியாபாத் மாவட்டத்தை மகந்த் திக்விஜய் நகர் என் றும் மாற்றுவதற்கு முடிவு செய்து, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதில், ஹபூர் மாவட்டநிர்வாகம் மற்றும் அவைத்யநாத் பெயரைச் சூட்டுவதற்கு மறுப்பு தெரிவித்து பதிலளித்துள்ளது. இந்த அவைத்யநாத் யாரென்றால், அவர் இன்றைய முதல்வர் ஆதித்யநாத்தின் குருநாதர் என்று கூறப்படுகிறது. இந்த பெயர் மாற்ற முயற்சிகள் புதியசர்ச்சைகளை கிளப்பியுள்ளன.

;